ெபங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

ெபங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-24 21:42 GMT

பெங்களூரு: பெங்களூரு மின்வாரியம் (பெஸ்காம்) சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் சில இடங்களில் மின்தடை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பெஸ்காம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பெங்களூருவில் நாளை (இன்று) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை போரலிங்கபாளையா, குனிகல் டவுன், கெங்கேரி, கலாசிபாளையா, ஜனகெரே, ஹெருர், கல்லூர், சோமலபுரா, பொம்மனஹள்ளி, ஒசஹள்ளி, திப்பூர், குப்பி டவுன், மடாபுரா, டி.பாளையா, பாகூர், நந்திஹள்ளி, அங்கசந்திரா, தாலேகொப்பா, சிவபுரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்