ஜனதாதளம்(எஸ்) கட்சியில் உள்ள குடும்ப தலைவர்கள் கட்சியில் யாரையும் வளர விடுவதில்லை. முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். என்னை முடிக்க மற்றொருவர் கொண்டு வரப்பட்டார். அக்கட்சியில் ஒரு சிலரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு வழங்கப்படும். கட்சிக்காக உழைக்கும் யாருக்கும் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் மதிப்பு கிடைக்காது.
- நாராயணகவுடா,
விளையாட்டு துறை மந்திரி.
யாரிடமும் நான் பாடம் கற்க வேண்டிய அவசியமில்லை
நாராயணகவுடா போன்றவர்கள் வளர ஜனதாதளம் (எஸ்) கட்சிைய அழிக்க வேண்டுமா?. அவர்கள் கழுத்தை அறுத்தவர்கள். அதிகார ஆசைக்காக ஆட்சியை கவிழ்த்தவர்கள். அவர்கள் உள்பட யாரிடம் இருந்தும் நான் பாடம் கற்க வேண்டிய அவசியமில்லை. யார் கட்சியை விட்டு சென்றாலும், மக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது.
- எச்.டி.குமாரசாமி,
முன்னாள் முதல்-மந்திரி.
முஸ்லிம்களுக்கு அநீதி முஸ்லிம்களுக்கு பா.ஜனதா அநீதி
இழைத்துள்ளது. முஸ்லிம் மக்களுக்கான தனி இடஒதுக்கீட்டை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இது தேர்தல் நேரத்தில் பா.ஜனதாவின் அரசியல் வித்தை. இதனை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும்.
- ரன்தீப்சிங் சுர்ஜேவாலா,
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்.
ராகுல்காந்தியை மிரட்ட பா.ஜனதா முயற்சி
நாட்டு மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று ராகுல்காந்தி போராடி வருகிறார். அவரின் செயல்பாடுகள் பா.ஜனதாவினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ராகுல்காந்தியை மிரட்டுவதற்காக அவருக்கு சிறை தண்டனை விதித்து, எம்.பி. பதவியையும் பறித்துள்ளனர். பா.ஜனதாவின் எத்தகைய மிரட்டலுக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். பா.ஜனதாவின் செயல்பாடுகளுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
- சித்தராமையா,
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்.
பா.ஜனதா வெறுப்பு அரசியல் செய்யாது
பா.ஜனதா கட்சி ஒருபோதும் வெறுப்பு அரசியல் செய்யாது. மிரட்டி அரசியல் செய்யும் கலாசாரம் எங்களுடையது அல்ல. ராகுல்காந்தி விஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. சட்டம் அனைவருக்கும் ஒன்று தான். ராகுல்காந்திக்காக சட்டத்தை மாற்ற முடியாது. சட்டத்தை விட பெரியவர்கள் யாரும் கிடையாது.
- ஸ்ரீராமுலு,
போக்குவரத்து துறை மந்திரி.