போலீஸ் நிலையங்கள் பா.ஜனதா கட்சி அலுவலகமாக செயல்படுகிறது

போலீஸ் நிலையங்கள் பா.ஜனதாவில் கட்சி அலுவலகமாக செயல்படுகிறது என்று முன்னாள் கல்வித்துறை மந்திரி கிம்மனே ரத்னாகர் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-12-24 18:45 GMT

சிவமொக்கா:-

சட்டம் ஒழுங்கு

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் கல்வித்துறை மந்திரி கிம்மனே ரத்னாகர் கூறியதாவது:-சிவமொக்கா மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா கட்டுப்பாட்டில் உள்ள 2 தாலுக்காக்களில் போலீஸ் நிலையங்கள் பா.ஜனதாவினர் கையில் உள்ளது. அவர்களின் கைபாவையாக போலீசார் செயல்படுகின்றனர். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சிவமொக்காவில் உள்ள 7 போலீஸ் நிலையங்கள் பா.ஜனதாவின் அலுவலகமாக செயல்படுகிறது.

பா.ஜனதாவின் அலுவலகம்

பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் அதை தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்து செயல்பட்டு வருகின்றனர். யார் பா.ஜனதாவிற்கு எதிராக செயல்பட்டாலும், போலீசை கொண்டு அடக்கு முறையில் ஈடுபடுவது, வழக்கு தொடருவது என்று அச்சுறுத்தி செய்து வருகின்றனர். அனைவரும் மிரட்டும் தொனியில் செயல்படுகின்றனர். இந்த அதிகாரத்தை உள்துறை மந்திரி அரகஞானேந்திராதான் அனைவருக்கும் கொடுத்துள்ளார். இதனை கண்டித்து காங்கிரஸ் சார்பில் வருகிற 27-ந் தேதி தீர்த்தஹள்ளியில் உள்ள துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் எதிரே போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்