கர்நாடகாவில் வீடு புகுந்து 80 வயது மூதாட்டி கற்பழிப்பு வாலிபரை போலீஸ் தேடுகிறது

மூதாட்டியை சமையல் அறைக்கு இழுத்து சென்று அவரது வாயை பொத்தி வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது.

Update: 2022-12-05 18:14 GMT

தாவணகெரே, 

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா பீர்கொண்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர்களுக்கு பிள்ளைகள் கிடையாது. இதனால் கணவர் இறந்த பிறகு மூதாட்டி அந்தப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். அவர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 3-ந்தேத மூதாட்டி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதேப்பகுதியை சேர்ந்த ரவி (வயது 30) என்பவர், மூதாட்டியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அவரை மூதாட்டி தடுக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில், ரவி மூதாட்டியை சமையல் அறைக்கு இழுத்து சென்று அவரது வாயை பொத்தி வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது. இதையடுத்து ரவி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மூதாட்டி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஒன்னாளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து ஒன்னாளி போலீசில் அந்த மூதாட்டி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரவியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்