ராஜஸ்தானில் இரு சமூகத்தினர் கல்வீசி தாக்கிக்கொண்ட சம்பவத்தில் போலீசார் காயம்
இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டோங்க்,
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் மல்புராவில் நேற்று இரு சமூகத்தினரிடையே கல் வீச்சு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்ததாக துணைப் பிரிவு அதிகாரி மல்புரா, மகிபால் சிங் தெரிவித்தார்.
மேலும், இந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் பலர் காயமடைந்ததுடன், பல வாகனங்கள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தை தடுக்கச்சென்ற சில காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இரு சமூகத்தினர் இடையே நடைபெற்ற கல்வீச்சு தாக்குதலில், பலர் காயமடைந்த நிலையில், சில போலீசாரும் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையின் முதல் முன்னுரிமை நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.