8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டு இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டு இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-24 14:34 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கொட்வாலி பகுதியை சேர்ந்த இளைஞன் அரிஜ். இவர் தன் அண்டை வீட்டை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் 8 வயது சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து சென்ற இளைஞன் அரிஜ் சிறுமியை கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர், சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளான். இதில் அந்த சிறுமிக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அரிஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அரிஜ் குற்றவாளி என தீர்ப்பளித்த கோர்ட்டு குற்றவாளி அரிஜ்க்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அபராதத்தொகையை செலுத்த தவறும்பட்சத்தில் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்