வளர்ச்சி பற்றி காங்கிரஸ் பேசுவதில்லை - பிரதமர் மோடி

தேர்தலின் போது வளர்ச்சி பற்றி காங்கிரஸ் பேசுவதில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-21 15:39 GMT

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், குஜராத்தின் பாரஜ் மாவட்டம் சுரேந்திரநகரில் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேர்தலின் போது இப்போது காங்கிரஸ் கட்சி வளர்ச்சி பற்றி பேசுவதில்லை. மோடிக்கு தங்கள் மதிப்பு என்ன என்று காட்டுவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவருகின்றனர். அவர்களின் ஆணவத்தை பாருங்கள். அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) ராஜகுடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். மதிப்பு இல்லாத நான் வெறும் சேவகன் தான்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்