பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி.!

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி உடலுக்கு பிரதமர் மோடி, தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.

Update: 2023-04-26 09:10 GMT

புதுடெல்லி,

பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், 5 முறை முதல்-மந்திரியாகவும் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல், வயது மூப்பினால் உடல்நல குறைவு காரணமாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்ததால் சில நாட்களுக்கு முன்னர் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 95 வயதான மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இறங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ்சிங் பாதலின் உடலுக்கு நேரில் சென்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

இவரவு மறைவு காரணமாக நாடு முழுவதும் 2 நாள் துக்க அனுசரிக்க படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இவரது மறைவு ஒரு தேசிய அரசியல் தலைவரின் இழப்பாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்