முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவருடைய நீண்டகால வாழ்க்கை மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக வேண்டி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.