பிரதமர் மோடி ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களுக்கு இன்று பயணம் ...

பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கின்றார்.

Update: 2023-10-05 05:18 GMT

டெல்லி,

பிரதமர் மோடி ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் சுமார் 18 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இன்று தொடங்கி வைக்கின்றார்.

அதன் படி இன்று காலை 11.30 மணியளவில் அவர் ராஜஸ்தான் செல்கின்றார். அங்கு ஜோத்பூரில் சுமார் ஐந்தாயிரம் கோடி மதிப்பிலான சாலை, சுகாதாரம், விமான போக்குவரத்து, உயர்கல்வி போன்ற துறைகளின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகின்றார்.

பின்னர் அங்கிருந்து மதியம் 3.30 மணியளவில் மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூருக்கு செல்கிறார். அங்கு புதியதாக கட்டப்படும் ராணி துர்காவதி கோவிலின் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார். பின்னர் சுமார் 12,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கின்றார். இதில் சாலை வசதிகள், ரெயில்வே, ஏரி வாயு குழாய் பதித்தல், சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் போன்ற நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்