பிரதமர் மோடி வரும் 5-ந்தேதி ஒடிசா பயணம்

ஒடிசாவில் ரூ.19,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

Update: 2024-03-03 13:33 GMT

Image Courtesy : ANI

புதுடெல்லி,

பிரதமர் மோடி வரும் 5-ந்தேதி ஒடிசா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள சாந்திகோலே பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, ஒடிசாவில் ரூ.19,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

இதன்படி எண்ணெய் மற்றும் எரிவாயு, நெடுஞ்சாலைத்துறை, அணுசக்தி உள்ளிட்ட துறைகளின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒடிசாவின் பராதிப் பகுதியில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹல்தியா பகுதி வரை 344 கி.மீ. நீளம் கொண்ட பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்