ஜி- 20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி
இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி- 20 நாடுகளின் உச்சி மாநாட்டின் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
புதுடெல்லி,
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை இந்தியாவுக்கான இந்தோனேசிய தூதரகம் வெளியிட்டுள்ளது.
அந்த கடிதத்தில், 'அன்பு, இறைபக்தி, தியாகம் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்கூறும் பக்ரீத் பண்டிகையை இந்தியாவில் வசிக்கும் 200 மில்லியன் முஸ்ஸிம்கள் கொண்டாடுகிறார்கள்
மனித குலத்தின் நன்மைக்காக சேவை செய்யும் அனைத்து மக்களிடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் நிலவுவதற்காக பிரதமர் பிராத்தனை செய்தார்.
இந்தாண்டு இறுதியில் நடைபெறும் ஜி- 20 உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள அழகான இந்தோனேசியாவிற்கு செல்ல ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்'. இவ்வாறு அதில் உள்ளது.