பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்..!

புதிதாக கட்டப்பட்டுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அவர் திறந்து வைக்கிறார்.

Update: 2022-05-28 02:48 GMT

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் செல்கிறார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை திறந்து வைக்கிறார்.

ராஜ்கோட்டின் அட்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதுஸ்ரீ கேடிபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை இன்று காலை அவர் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து, மாலை காந்திநகரில் நடைபெறும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்களின் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றுகிறார்.

பிரதமருடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் இன்று குஜராத் செல்கிறார். மேலும், கலோலில் ரூ.175 கோடி செலவில் இஃப்கோ நிறுவனத்தால் கட்டப்பட்ட நானோ யூரியா (திரவ) ஆலையையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்