நாளை கோவா செல்கிறார் பிரதமர் மோடி

கோவாவில் ஓ.என்.ஜி.சி. கடல் உயிர் வாழ் மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

Update: 2024-02-05 09:15 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி நாளை கோவா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஓ.என்.ஜி.சி. கடல் உயிர் வாழ் மையத்தைத் திறந்து வைக்கிறார். பின்னர் இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் விக்சித் பாரத் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

கோவாவில் ரூ.1,330 கோடி மதிப்பிலான பொதுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். கோவாவின் தேசிய தொழில்நுட்ப கழகத்தின் நிரந்தர வளாகத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார்.

தேசிய நீர் விளையாட்டுக் கழகத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், ரோஸ்கர் மேளாவின் கீழ் பல்வேறு துறைகளில் புதிதாக அரசு ஆள்சேர்ப்பு செய்யப்பட்ட 1,930 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்குகிறார். மேலும், பல்வேறு நலத்திட்டங்களுக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்