பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

காலத்தால் அழியாத முத்துராமலிங்க தேவரின் கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும் என்று பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

Update: 2023-10-30 11:05 GMT

புதுடெல்லி,

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, அரசியல் தலைவர்கள் பலர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டு இருப்பதாவது:- மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம். சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும்" என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்