அத்வானி பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

அத்வானி பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கே நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-08 16:46 GMT

புதுடெல்லி,

பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே.அத்வானி இன்று தனது 96-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அத்வானி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது வீட்டிற்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சார பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி சென்ற பிரதமர் மோடி, அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து, பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் மோடியுடன் மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் அத்வானி இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்