ஜம்மு காஷ்மீரில் ரூ.1,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீரில் ரூ.1,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

Update: 2024-06-20 01:47 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் 84 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீரில் சாலை உள்கட்டமைப்பு, தண்ணீர் விநியோகம், உயர்கல்வி உள்ளிட்ட ரூ.1,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிற்சாலை வளாகங்கள் மற்றும் 6 அரசு கல்லூரிகளின் மேம்பாட்டு பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் நடைபெறும் இளைஞர்களுக்கான கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதோடு அரசு பணிகளுக்கு தேர்வாகியுள்ள 2 ஆயிரம் நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்