உலக அரங்கில் முன்னேற்றம்: இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் உலக அரங்கில் முன்னேறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2024-06-28 00:28 GMT

புதுடெல்லி,

லண்டனில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் டைமஸ் உயர்கல்வி தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்கள் முன்னேறி வந்துள்ளதாக அதன் அதிகாரி பில் பாட் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையிலும், இந்திய பல்கலைக்கழகங்களை பாராட்டும் வகையிலும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் உலக அரங்கில் முன்னேறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தரமான கல்விக்கான எங்கள் அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கும் முடிவுகளைத் தருகிறது. எங்கள் கல்வி நிறுவனங்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம் மற்றும் வளர்ச்சி மற்றும் புதுமைக்கான வாய்ப்புகளை வழங்குவோம். இது எங்கள் இளைஞர்களுக்கு பெரிதும் உதவும்.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்