ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: உஸ்பெகிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.

Update: 2022-09-11 12:19 GMT

புதுடெல்லி,

பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது, சீனா, இந்தியா, ரஷியா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பினா்களை கொண்டதாகும்.

உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தானின் சமா்கண்ட் நகரில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் செல்கிறார். இதற்காக பிரதமர் மோடி வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்