திருமணம் குறித்து இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வைத்த முக்கிய கோரிக்கை

வெளிநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்வது தற்போது பிரபலமாகி வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2024-01-23 05:12 GMT

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில் அமையவிருக்கும் கோடல்தம் அறக்கட்டளை புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் காணொலி மூலம் பங்கேற்றபோது பிரதமர் மோடி கூறுகையில்,

புற்றுநோய் போன்ற தீவிர நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவது அனைவருக்கும் சவாலான விஷயம்தான். அந்த வகையில், புற்றுநோய் பாதிப்புக்கான சிகிச்சை பெற மக்கள் சிரமங்களைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

இதற்கென புதிதாக 30 மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டிருப்பதோடு, புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகள் கட்டுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.

மேலும் திருமணங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், தற்போது வெளிநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்வது பிரபலமாகி வருகிறது. அவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்று திருமணங்களை நடத்துவது பொருத்தமாக இருக்குமா? இதனால் இந்தியாவின் வளம் எந்த அளவுக்கு வெளியே செல்கிறது? நமது நாட்டிலேயே திருமணங்களை நடத்த முடியாதா? வெளிநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்யும் பழக்கத்தைத் தவிர்த்து இந்தியாவிலேயே திருமணம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். அதன்மூலம் நாட்டின் செல்வமும் வெளியே போகாது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்