டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்- பிரதமர் மோடி

டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-25 09:00 GMT

 புதுடெல்லி,

உத்தரகாண்ட் தலைநகரான டேராடூனில் இருந்து டெல்லி வரை இயங்கும் புதிய வந்தே பாரத் ரெயில்சேவையும் மாநிலத்தின் இரயில்களை 100 சதவீதம் மின்மயமாக்கும் திட்டத்தினையையும் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி,

"உலகளாவிய இருக்கும் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவைப் பார்க்கவும், அதைப் புரிந்துகொள்ளவும் இந்தியாவுக்குச் வர விரும்புகிறார்கள். இது உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஒரு சிறந்த வாய்ப்பு" என்று தொடக்க விழாவில் பிரதமர் கூறினார்.

மேலும் தான் முத்தரப்பு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதாகவும், முழு உலகமும் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர் பார்க்கிறது என்று சொல்ல முடியும் என்றார்.

தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திய விதத்தை பார்த்து உலகமே பாராட்டுகிறது என குறிப்பிட்டார்.

314 கி.மீ. தொலைவை 4 மணி நேரம் 45 நிமிடங்களில் ரெயில் கடந்து செல்லும் என்றும், புதன்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்கள் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்