உம்மன் சாண்டி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Update: 2023-07-18 04:41 GMT

டெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள்-முதல் மந்திரியுமான உம்மன் சாண்டி (வயது 79) இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உம்மன் சாண்டி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவிற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உம்மன் சாண்டி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கேரளாவின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை பொதுவாழ்விற்கு அர்ப்பணித்த பணிவான நபரை நாம் இழந்துவிட்டோம். நான் குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது அவர் கேரள முதல்-மந்திரியாக செயல்பட்டபோதான எங்கள் சந்திப்புகளை நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில் எனது இரங்கலை உம்மன் சாண்டி குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்