மிகைல் கோர்பசேவ் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்

சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிகைல் கோர்பசேவ் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-01 04:37 GMT

புதுடெல்லி,

சோவியத் ஒன்றியத்தின் முதுபெரும் தலைவரான மிகைல் கோர்பசேவ் 1985 முதல் 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்தார்.

அவரது ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். மிகைல் கோர்பசேவ்வின் சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாக மாறியது.

சோவியத் யூனியன் பொருளாதாரம் மறைமுகமான பணவீக்கம் மற்றும் வினியோகப் பற்றாக்குறை ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டிருந்ததால், மறுசீரமைப்பு என்ற பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தையும் மிகைல் கோர்பசேவ் தொடங்கினார்.

1990-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மிகைல் கோர்பசேவ் 91 வயதான இவர் உடல்நலக்குறைவால் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்ததாக ரஷியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டது. கோர்பசேவ் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், மிகைல் கோர்பசேவ் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்த முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவர் கோர்பசேவ், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்கிறோம் என் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்