நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை உ.பி முன்னெடுத்து செல்கிறது: பிரதமர் மோடி

இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியை உத்தர பிரதேசம் வழிநடத்தி செல்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

Update: 2023-02-10 09:33 GMT

லக்னோ

உத்தரப் பிரதசேம் மாநிலத்தில் இன்று உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023 இன்று நடைபெற்றது. 12-ம் தேதி ரை நடைபெறும் மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி மோசமான பொருளாதார நிலை கொண்ட மாநிலம் என்று அழைக்கப்பட்ட உத்தரப் பிரதேசம் இன்று நல்லாட்சிக்கு பெயர் பெற்றது என்று பேசினார். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியை உத்தர பிரதேசம் வழிநடத்தி செல்கிறது.

உத்தர பிரதேசத்தின் மீது எனக்கு தனி பாசமும், சிறப்பு பொறுப்பும் உள்ளது. மோசமான பொருளாதார நிலை கொண்ட மாநிலம் என்று அழைக்கப்பட்ட உத்தரப் பிரதேசம் இன்று நல்லாட்சிக்கு பெயர் பெற்றது. 'மோட்டா ஆனாஜ்' என்றும் அழைக்கப்படும் தினையின் நன்மைகள் நிறைந்த உணவு சூப்பர் ஃபுட்டாக உருவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்