"தயவு செய்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்"- தலைமை நீதிபதியிடம் மம்தா பானர்ஜி வேண்டுகோள்

சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் அனைத்து ஜனநாயக அதிகாரமும் கைப்பற்றப்படுவதாக மம்தா தெரிவித்தார்.

Update: 2022-10-30 14:07 GMT

Image courtesy: PTI 

கொல்கத்தா,

கொல்கத்தாவில் உள்ள தேசிய நீதியியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் (NUJS) பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, நாட்டில் ஜனநாயக அமைப்புகள் முடக்கப்படுவதாக கூறி தனது கவலையை எழுப்பினார். மேலும் இந்த போக்கு தொடர்ந்தால், இது நாட்டில் ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.

மேலும் பேசிய மம்தா, "சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் அனைத்து ஜனநாயக அதிகாரமும் கைப்பற்றப்படுகிறது. துன்புறுத்தலில் இருந்து மக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டும். ஜனநாயகம் எங்கே போய் விட்டது? தயவு செய்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்" என்று தலைமை நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், "நீதிபதி யு.யு. லலித்தை நான் வாழ்த்த வேண்டும். இரண்டு மாதங்களில், நீதித்துறை என்றால் என்ன என்பதை அவர் காட்டியுள்ளார்" என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்