சிறைத்தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தயார்
சிறைத்தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி பற்றிய அவதூறு பேச்சுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கடந்த 23-ந்தேதி 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் சூரத் செசன்ஸ் கோர்ட்டில் தன் மீதான தண்டனை தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு செய்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கான மனுவை கட்சியின் மூத்த சட்ட ஆலோசகர்கள் தயார் செய்துள்ளனர்.
ஒன்றல்லது இரண்டு நாளில் இந்த மனு சூரத் செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.