பயன்படுத்த எளிதான பொதுவான வருமானவரி படிவம் அறிமுகப்படுத்த திட்டம்

இந்நிலையில், வருமானவரி செலுத்தும் அனைத்து வகையினரும் பயன்படுத்துவதற்கு எளிதான ஒரே வருமானவரி படிவத்தை அறிமுகப்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது

Update: 2022-11-02 00:51 GMT

புதுடெல்லி,

வருமானவரி செலுத்தும் பல்வேறு வகையிலானவர்கள் கணக்கு தாக்கல் செய்வதற்காக தற்போது 7 வகை படிவங்கள் உள்ளன. இந்நிலையில், வருமானவரி செலுத்தும் அனைத்து வகையினரும் பயன்படுத்துவதற்கு எளிதான ஒரே வருமானவரி படிவத்தை அறிமுகப்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.

வருமானவரி செலுத்துவதற்கு ஒரே படிவத்தை அறிமுகப்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அனைவரும் தங்கள் கருத்துகளை வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறு, நடுத்தர வரி செலுத்துவோருக்கான வருமானவரி படிங்கள் 1-ம், 4-ம், தொடர்ந்து இருக்கும். ஆனால் தனிநபர்கள், பொதுவான வருமானவரி படிவத்தையும் பயன்படுத்தி கணக்கு தாக்கல் செய்யலாம். 'டிஜிட்டல் சொத்துகள்' மூலம் வந்த வருமானத்தை தெரிவிக்கவும் புதிய பொது வருமானவரி படிவத்தில் தனிப்பகுதி இருக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்