கவர்னர் கோரிக்கையை நிராகரித்தார் பினராயி விஜயன்!
கேரள நிதி மந்திரி கே.என்.பாலகோபாலனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கவர்னர் ஆரிப் முகமது கானின் கோரிக்கையை முதல்-மந்திரி பினராயி விஜயன் நிராகரித்தார்.
திருவனந்தபுரம்,
கேரள நிதி மந்திரி கே.என்.பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க அரசுக்கு கவர்னர் ஆரிப் முகம்மது கான் கோரிக்கை விடுத்தார். தமது ஒப்புதலை மந்திரி பாலகோபால் இழந்துவிட்டதாகக் கூறி அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க கவர்னர் கோரிக்கை விடுத்தார். மேலும், மந்திரி பாலகோபால் பேச்சு தம்மை அவமதித்துவிட்டதால் அவருக்கு அளித்த ஒப்புதலை திரும்பப் பெறுவதாக கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு கேரளத்தை புரிந்துகொள்ள முடியாது என்று மந்திரி பாலகோபால் பேசி இருந்தார். மேலும், துணைவேந்தர்களை நியமிக்கும் பிரச்சினையில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்டுள்ளது. மந்திரி பதவி நீக்கக் கோரிய கவர்னரின் நடவடிக்கையால் அவருக்கும், அரசுக்குமான மோதல் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், மந்திரி பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க முடியாது என்ற கவர்னர் கோரிக்கையை முதல்-மந்திரி பினராயி விஜயன் நிராகரித்துள்ளார். மந்திரி பாலகோபால் பேச்சு கவர்னர் பதவிக்கு அவமரியாதையை ஏற்படுத்தவில்லை என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் மறுத்துள்ளார். ஒரு மந்திரியை நீக்கும் படி கவர்னர் கூறுவதும், முதல்-மந்திரி அதை நிராகரிப்பதுமாக உள்ளது.