பீகாரில் நடைபெறுவது போட்டோ எடுக்கும் நிகழ்வு.! எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து அமித்ஷா விமர்சனம்

வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் பிடித்து பெரிய வெற்றியை பெறும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியுள்ளார்.

Update: 2023-06-23 09:15 GMT

ஜம்மு காஷ்மீர்,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒருநாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கிறார். இதனிடையே பீகாரில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்த கூட்டம் குறித்து அமித் ஷா பேசுகையில், "பீகார் மாநிலம் பாட்னாவில் தற்போது போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாட்னாவில் கூடியிருப்பவர்கள் பிரதமர் மோடியையும் தேசிய ஜனநாயக கூட்டணியும் எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 2024ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராவார். வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் பிடித்து பெரிய வெற்றியை பெறும்." இவ்வாறு அவர் பேசினார்.

 

Full View


Tags:    

மேலும் செய்திகள்