60 தொகுதிகளுக்கு 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல்

60 தொகுதிகளுக்கு 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

Update: 2023-03-31 22:01 GMT

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் 224 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அந்த கட்சி முதற்கட்டமாக கடந்த 20-ந்தேதி 80 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில், கோலாரில் சுகைல் தில் நவாஸ், கே.ஆர்.புரம்-டாக்டர் கேசவ் குமார், பேடராயனபுரா- உமேஷ் பாபு, யஷ்வந்தபுரம்- சசிதர் சி ஆராத்யா, ராஜராஜேஸ்வரி நகர்- அனந்த சுபாஷ் சந்திரா, கோவிந்தராஜ்நகர்- அஞ்சனகவுடா, பசவனகுடி- சத்யலட்சுமி ராவ், மகாதேவபுரா- சி.ஆர்.நடராஜ், பெங்களூரு தெற்கு- அசோக் மிருத்ஞ்சயா, ஆனேக்கல்- அனந்தா, வருணா- ஜி.எஸ். ராஜேஷ் உள்பட 60 பேர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் 11 பெண்களும், 14 விவசாயிகளும், முன்னாள் பி.எம்.டி.சி. கண்டக்டர் ஒருவரும் வேட்பாளர்களாக ஆம் ஆத்மி கட்சி நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த கட்சி 140 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் 84 தொகுதிகளுக்கு அக்கட்சி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்