மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லியை அதிகரிக்க அனுமதி?- இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் மறுப்பு
மூலிகை, மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லி அளவை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கவில்லை என்று இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவை, 10 மடங்கு வரை அதிகரித்துக் கொள்ள, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அத்தகைய அறிக்கைகள் தவறானவை என்று உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
மூலிகை, மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லி அளவை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கவில்லை என்றும் உலகம் முழுவதும் அதிகபட்ச அளவு எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அதைத்தான் இந்தியாவும் பின்பற்றுவதாக தெரிவித்துள்ளது.
இந்திய மசாலா பொருட்கள் சிலவற்றில் அளவுக்கு அதிகமாக, எத்திலீன் ஆக்சைடு பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாக கூறி, அவற்றின் இறக்குமதிக்கு வெளிநாடுகள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.