ஆதர்ஷ் கிராம வளர்ச்சி திட்டங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்-சுமலா எம்.பி. பேட்டி

ஆதர்ஷ் கிராம வளர்ச்சி திட்டங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று சுமலா எம்.பி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-18 18:45 GMT

மண்டியா:

மண்டியா மாவட்டம் இண்டுவாலா அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமலதா எம்.பி தலைமையில் ஆதர்ஷ் கிராம வளர்ச்சி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுமலதா எம்.பி கூறியதாவது:- ஆதர்ஷ் கிராம வளர்ச்சி திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். கிராம பஞ்சாயத்தில் உள்ள நிறை, குறைகளை இதன் மூலம் வெளியே கொண்டு வரவேண்டும். குறிப்பாக சாலை பணிகள், கால்வாய், பள்ளிகள், சுடுகாடுகள், கழிவறைகள் இந்த திட்டங்களின் மூலம் செய்து கொடுக்க முடியும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஜல ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து கொடுக்க முடியும். எனவே இந்த திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கருதப்படுகிறது. இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்