போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும்; உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா பேச்சு
மக்களுக்கு, போலீசார் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்று உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.
சிவமொக்கா;
ஆலோசனை கூட்டம்
சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது போலீசாருக்கு உள்ள நெருக்கடிகள், குறைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை கேட்டறிந்தார். பின்னர் கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-
போலீசாரின் செயல்பாடுகள் குற்றவாளிகளுக்கு நடுக்கத்தை உண்டாக்கும் வகையில் இருக்க வேண்டும். மக்களுக்கு, போலீஸ் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். நீதி, நேர்மையுடன் அமைதியாக நடந்து சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். சிவமொக்கா மாவட்டத்தில் மணல் கடத்தல், சூதாட்டம், கஞ்சா விற்பனை போன்றவற்றை போலீசார் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
நீதியை நிலைநாட்ட...
நீதியை போலீசார் நிலைநாட்ட வேண்டும். அதுதான் போலீசாரின் முக்கிய கடமை. சிவமொக்கா வழியாக செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் போலீஸ் ஐ.ஜி. தியாகராஜன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.