பாஜக வெற்றி பெற இமாச்சல பிரதேச மக்கள் முடிவு செய்துவிட்டனர் - ஜே.பி.நட்டா பேட்டி

இமாச்சல பிரதேச மக்கள் மோடி மீது அன்பு செலுத்தி பாஜகவை வெற்றி பெற முடிவு செய்துள்ளனர் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

Update: 2022-11-06 10:40 GMT

சிம்லா,

இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இமாசல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ந்தேதி நடைபெறும். இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட 1.22 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்கை செலுத்துகின்றனர். 100 வயது கடந்த 1,190 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தநிலையில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஜன் சம்பர்க் அபியானில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்கள் உற்சாகமடைந்து எங்கள் பிரச்சாரத்தை வாழ்த்தி வருகின்றனர். பிரதமர் மோடி மீது மக்கள் மிகுந்த அன்பு செலுத்தி, வரும் நவம்பர் 12-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பாஜகவை வெற்றி பெற முடிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தனது சொந்த அறிக்கையை நம்பவில்லை, அதில் தொலை நோக்கு, வழிகாட்டுதல் எதுவும் இல்லை. எங்களின் தேர்தல் அறிக்கை உரிய விடாமுயற்சியுடன் உருவாக்கப்பட்டு மக்களால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்