மேற்கு வங்காள வன்முறை: துப்பாக்கிகளுடன் பிற மாநிலத்தவர்களை பா.ஜ.க அழைத்து வந்துள்ளது- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
பா.ஜ.க. தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நேற்று கடுமையான மோதல் ஏற்பட்டது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் முன்னாள் மந்திரிகள் சிலர், பல கோடி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, கைது செய்யப்பட்டு, வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனை முன்னிட்டு அரசின் ஊழலுக்கு எதிராக கொல்கத்தா நகரில் பா.ஜ.க. சார்பில் நபன்னா அபியான் என்ற பெயரில் பேரணி ஒன்று நடத்துவது என முடிவானது. இதில் பங்கேற்க மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் நேற்று கொல்கத்தா நகருக்கு படையெடுத்தனர்.
எனினும், ராணிகஞ்ச், போல்பூர் மற்றும் துர்காப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு வெளியே மற்றும் பல இடங்களில் போலீசார் அவர்களை வரவிடாமல் தடுத்தனர். இதனால், .
கூட்டத்தினரை கலைப்பதற்காக, பேரணியாக வந்தவர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அங்கு ஏற்பட்ட வன்முறையில் காவல் துறை வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையில் போலீசார் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதனால் மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் போராட்டங்கள் என்ற பெயரில் மாநிலத்தில் நேற்று வன்முறையை நடத்த மற்ற மாநிலங்களிலிருந்து வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளுடன் குண்டர்களை பாஜக அழைத்து வந்ததாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த வன்முறையின் போது மேற்கு வங்க போலீசார் கொடூரமாக தாக்கப்பட்ட போதிலும், அவர்கள் துப்பாக்கிச் சூடு அல்லது லத்திசார்ஜ் கூட செய்யவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
"அமைதியான போராட்டங்களில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் போக்கிரித்தனம் பொறுத்துக்கொள்ளப்படாது," என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.