பா.ஜனதாவை மக்கள் தோற்கடித்து காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள்- யு.டி.காதர் எம்.எல்.ஏ. பேட்டி

பா.ஜனதாவை மக்கள் தோற்கடித்து காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று யு.டி.காதர் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-01 18:45 GMT

மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வாலில் உள்ள விருந்தினர் மாளிகையில் மங்களூரு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. யு.டி.காதர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா ஆட்சியை தேர்ந்தெடுத்ததற்காக மக்கள் வருந்துகிறார்கள். அந்த கட்சியால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அதனால் வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் பா.ஜனதாவை தோற்கடித்து காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள். நேர்மையான அதிகாரிகளை பா.ஜனதா அரசு ஊழல்வாதிகளாக மாற்றியுள்ளது. உல்லாலில் வளர்ச்சி திட்டங்களுக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. குடிநீர், சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சாலை பள்ளங்களால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. சாலை பள்ளங்களை மூடுவதில் அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. வரும் சட்டசபை தேர்தலில் 50 சதவீதம் இளைஞர் வேட்பாளர்களுடன் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்