பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிற்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடகில் பஸ் நிறுத்ததில் அரசு பஸ்கள் நிற்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-06 16:22 GMT

குடகு:-

குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவில் தோரேனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்கள் பயன்பாட்டிற்காக அரசு சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பஸ்கள், பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்படுவது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து குடகு ரக்‌ஷன வேதி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தோரனூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:- தோரனூர் பஸ் நிறுத்தத்தில் அனைத்து அரசு பஸ்களும் நிறுத்தவேண்டும். ஆனால் டிரைவர்கள் பஸ்களை நிறுத்துவது இல்லை. சீட்டுகள் காலியாக இருந்தாலும் பஸ்களை நிறுத்தாததால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமான அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்