திரிணாமுல் காங்கிரசில் இருந்து முன்னாள் எம்.பி. ராஜினாமா
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி. பவன் வர்மா ராஜினாமா செய்துள்ளார்.
கொல்கத்தா,
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் போட்டியிட்டு எம்.பி.யானவர் பவன் வர்மா. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகி மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அவர் கடந்த 11 மாதங்களாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நீடித்து வந்தார்.
இந்நிலையில், பவன் வர்மா இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை பவன் வர்மா திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய பவன் வர்மா மீண்டும் ஐக்கிய ஜனதா தள கட்சியிலேயே இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.