மெட்ரோ ரெயில்களில் பயணிகள் வரிசையில் நின்று ஏற நடவடிக்கை

பெண் பயணிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை தடுக்க மெட்ரோ ரெயில்களில் பயணிகள் வரிசையில் நின்று ஏற நடவடிக்கை எடுக்க பி.எம்.ஆர்.சி.எல். திட்டமிட்டுள்ளது.

Update: 2023-08-09 18:45 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரெயில்களில் ஏறும்போது பயணிகள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுபற்றி ஏற்கனவே பலமுறை பயணிகள் சார்பில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரச்சினையை தீர்க்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஒரு புதிய வழிமுறையை கையாள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி மெட்ரோ ரெயில் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி யஷ்வந்த் சவான் கூறுகையில், 'பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை மற்றும் பயணிகளின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மெட்ரோ ரெயில்களில் பெட்டிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், பயணிகள் வரிசையில் நின்று ஏறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்