எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-07-27 09:28 GMT

புதுடெல்லி,

விலைவாசிஉயர்வு, ஜிஎஸ்டி வரி, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் கடந்த 7 நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் அவைகள் முடங்கின.

இதற்கிடையே அமளியில் ஈடுபட்ட 20 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்து அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் அறிவித்தை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை முதல் எம்.பி.க்கள் இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.

இதனிடையே, 20 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 4 மக்களவை எம்.பி.க்கள் உட்பட சஸ்பெண்ட் செய்யப்பட்ட 24 எம்.பி.க்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை 50 மணி நேரம் பகல்-இரவு போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்