பூங்காக்கள் இரவு 8 மணிவரை திறந்திருக்கும் -மாநகராட்சி அதிரடி உத்தரவு

பெங்களூருவில் பூங்காக்கள் இரவு 8 மணிவரை திறந்திருக்கும்என்று மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-06-07 18:45 GMT

பெங்களூரு:-

பெங்களூருவுக்கு பூங்கா நகரம் என்ற சிறப்பு பெயர் உண்டு. அந்த பெயருக்கு ஏற்றதுபோல் பெங்களூருவில் எங்கு பார்த்தாலும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு இருக்கும். சாலைகளில் இருபுறங்களிலும் மரங்கள் செழித்து வளர்ந்து காணப்படுகிறது. பெங்களூருவில் கப்பன் பூங்கா மற்றும் லால்பாக் ஆகிய 2 பெரிய பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் விடுமுறை தினங்களில் பலரும் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வந்து பொழுதை ரசித்து செல்கின்றனர். மேலும் முதியவர்கள் உள்பட சிலர் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சிகளை மேற்கொள்கின்றனர். பெங்களூருவில் உள்ள சிறிய பூங்காக்களில் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும் காலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

பூங்காவை இரவு 10 மணி வரை திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் குற்றச்சம்பவங்கள் நடைபெறும் என்பதால் போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் பொது மக்கள் வசதிக்காக பூங்காக்களின் நேரத்தை மாநகராட்சி நீட்டித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இனி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பூங்காக்கள் திறந்து இருக்கும் எனவும், இடைப்பட்ட நேரங்களில் பூங்கா பராமரிப்பு பணிகளை பணியாளர்கள் மேற்கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்