'இந்தியா மாடலை பாகிஸ்தான் பின்பற்றுகிறது' - கார்த்தி சிதம்பரம் ட்வீட்
3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் இம்ரான் கான் தனது எம்.பி. பதவியை இழந்துள்ளார்.
புதுடெல்லி,
தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனால் இம்ரான்கான் தனது எம்.பி. பதவியை இழந்துள்ளார். மேலும் இஸ்லாமாபாத் விசாரணை கோர்ட்டு அவரை குற்றவாளி என்று அறிவித்த சிறிது நேரத்திலேயே, லாகூரில் உள்ள அவரது ஜமான் பார்க் இல்லத்திற்குள் புகுந்து பஞ்சாப் காவல்துறையினர் இம்ரான் கானை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பிரதான எதிர்க்கட்சித் தலைவரை தேர்தலில் போட்டியிட விடாமல் தடுப்பதில் இந்தியா மாடலை பாகிஸ்தான் பின்பற்றுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.