மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது - ப.சிதம்பரம்
மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், மணிப்பூர் செல்ல பிரதமர் மோடிக்கு கடந்த 100 நாட்களாக நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இன அழிப்பு வெட்கக்கேடானது என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.