ஜாமினில் வந்த பாலியல் குற்றவாளி பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

பாலியல் வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வந்த குற்றவாளி பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

Update: 2022-08-03 05:39 GMT

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் பதன் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை கடந்த 2020-ம் ஆண்டு அதேபகுதியை சேர்ந்த விவேக் பட்டேல் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 2020-ம் ஆண்டு விவேக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேக் கடந்த ஆண்டு ஜாமினில் வெளியே வந்தார்.

இந்நிலையில், ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்த விவேக் 2 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த அதே இளம்பெண்ணின் வீட்டிற்குள் கடந்த மாதம் அத்துமீறி தனது நண்பனுடன் சென்றுள்ளான். அங்கு, வீட்டில் தனியாக இருந்த அந்த இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி தன் நண்பனுடன் சேர்ந்து விவேக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இந்த பாலியல் வன்கொடுமையை வீடியோவாக எடுத்த விவேக், தன் மீது ஏற்கனவே கொடுத்த புகாரை திரும்பப்பெறும்படியும், இல்லாவிட்டால் இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மிரட்டியுள்ளான்.

தன் மீது ஏற்கனவே கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை திரும்பப்பெறும்படி விவேக் தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு நடந்த கொடூரம், கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து நேற்று போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளி விவேக் மற்றும் அவனது நண்பனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை 2 ஆண்டுகளுக்கு பின் ஜாமினில் வந்த குற்றவாளி நண்பனுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்