ஒடுக்கப்பட்ட பிரிவினர் அரசியலமைப்பு உரிமைகளை பெற அணி திரள வேண்டும்

ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் தங்கள் அரசியலமைப்பு உரிமைகளை பெற அணி திரள வேண்டும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.

Update: 2022-11-29 20:32 GMT

ஆனேக்கல்:-

ஒனகே ஒபவ்வா ஜெயந்தி விழா

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் ஒனகே ஒபவ்வா ஜெயந்தி விழா, கர்நாடக மாநில மக்கதவர் எனும் கன்னட அமைப்பு சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவில் மத்திய மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு ஒனகே ஒபவ்வாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து

மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் விழாவில் பேசும்போது கூறியதாவது:-

நாட்டில் 95 சதவீதம் பேருக்கு சொந்த வீடு, நிலம் இல்லை. நாட்டில் உள்ள அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். இந்த நோக்கத்தோடுதான் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.

லட்சியமாக இருக்க வேண்டும்

அனைத்து ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் தங்களின் அரசியலமைப்பு உரிமை களைப் பெற தங்களைத் தாங்களே அணிதிரட்ட வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இந்த திசையில் அனைத்து சங்கங்கள், அமைப்புகள், கட்சிகள் என அனைத்து அமைப்புகளும் பணியாற்ற வேண்டும். அனைத்து கூட்டங்களுக்கும் மக்கள் திரட்டப்படுகிறார்கள்.

ஆனால் அவர்களுக்கான வளர்ச்சிப் பணிகள் தான் கானல் நீராக உள்ளது. 18-ம் நூற்றாண்டில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒனகே ஒபவ்வா நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்தார். அவரது பிறந்தநாளை கொண்டாடுவதன் மூலம் சுயமரியாதை மற்றும் தேசபக்தியே நம் அனைவரின லட்சியமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்