உப்பள்ளியில் புதிதாக கோசாலை திறப்பு; மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பங்கேற்பு
உப்பள்ளியில் புதிதாக கோசாலையை மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பங்கேற்று திறந்து வைத்தார்.
உப்பள்ளி;
உப்பள்ளி, தார்வாா் இடைப்பட்ட பகுதியில் இஸ்கான் கோவில் வளாகத்தில் புதிதாக கோசாலை திறக்கப்பட்டுள்ளது. இந்த கோசாலையை மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கோசாலையில் உள்ள 15 மாடுகளுக்கும் பழங்கள் கொடுத்தார். பின்னர், மாடுகளுக்கு மாலை அணிவித்து வணங்கினார்.
இந்த விழாவில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், இஸ்கான் கோவில் நிர்வாகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.