ஒடிசாவில் குழந்தைகளுக்கான சிறப்பு அமைப்புகளைக் கொண்ட 16 காவல் நிலையங்களில் திறப்பு

காவல் நிலையம் குறித்த பயத்தை நீக்கும் வகையில் குழந்தைகளுக்கான சிறப்பு அமைப்புகளைக் கொண்ட 16 காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Update: 2022-11-02 15:19 GMT

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் காவல் நிலையங்களுக்கு பல்வேறு புகார் காரணங்களுக்காக வரும் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாகவும், காவல் நிலையம் குறித்த பயத்தை நீக்கும் வகையிலும் குழந்தைகளுக்கான சிறப்பு அமைப்புகளைக் கொண்ட (Child Friendly Police Stations) 16 காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதற்காக காவல் நிலையங்களில் விளையாட்டுப் பொருட்கள், காமிக்ஸ் புத்தகங்கள், பல வண்ணங்களைக் கொண்ட சுவர் ஓவியங்கள், தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதே போல் மாநிலம் முழுவதும் மேலும் 18 காவல் நிலையங்களை திறக்க உள்ளதாக ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்