ஒடிசாவில் 25 சதவீதத்தினர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர் - அதிகாரி தகவல்
ஒடிசாவில் 25 சதவீதத்தினர்தான் பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவனேசுவரம்,
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.
ஒடிசாவில் இந்த தடுப்பூசி போடுவதில் மக்களிடம் போதிய ஆர்வம் இல்லை. 25 சதவீதத்தினர்தான் (80.90 லட்சம் பேர்) இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.
இதுபற்றி மாநில சுகாதார இயக்குனர் பிஜய் பானிகிரகி கூறும்போது, "30-ந்தேதிவரை இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும். மக்கள் ஆர்வமுடன் வந்து அதை செலுத்திக்கொள்ள வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.