ஆன்லைன் சூதாட்டம்: தேவையான சட்டங்கள் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது: மத்திய அரசு
ஆன்லைன் சூதாட்டங்களை தங்களது வரம்பிற்குள் கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஆன்லைன் சூதாட்டங்களை தங்களது வரம்பிற்குள் கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் பார்த்திபன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார்.