இந்தியாவின் அனைத்து சவால்களையும் ஒரு தலைவரால் சமாளிக்க முடியாது- மோகன் பகவத்

நாட்டின் நிலையை மேம்படுத்தும் பொறுப்பை மக்கள் ஏற்க வேண்டும் என மோகன் பகவத் பேசியுள்ளார்.

Update: 2022-08-09 17:33 GMT

Image Courtesy : PTI 

நாக்பூர்,

நாக்பூரில் நடைபெற்ற மராத்தி இலக்கிய அமைப்பான விதர்பா சாகித்ய சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். இந்த விழாவில் அவர் பேசியதாவது :

ஒரு தலைவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் இந்த நாட்டின் முன் உள்ள அனைத்து சவால்களையும் அவர் ஒருவரால் சமாளிக்க முடியாது. ஒரு அமைப்பு, ஒரு கட்சி, ஒரு தலைவர் மாற்றத்தை கொண்டு வர முடியாது. அவர்கள் மாற்றத்தை கொண்டு வர உதவுகிறார்கள். சாமானியர்கள் துணை நிற்கும் போது தான் மாற்றம் ஏற்படுகிறது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. ஆனால் சாமானிய மக்கள் விழிப்புணர்வோடு வீதிகளில் இறங்கிய போது தான் அது வெற்றி பெற்றது. புரட்சியாளர்களும் சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்தனர். ஆங்கிலேயர்களுக்கு முன் மிகப்பெரிய சவாலை சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கினார். ஆனால் முக்கிய விஷயம் என்னவென்றால் இதனால் மக்கள் தைரியம் பெற்றனர்.

சமூகத்தில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் அனைத்து விஷயங்களும் நடைபெறுகின்றன. ஆர்எஸ்எஸ் சமூகத்தை ஒழுங்கமைக்கிறது. நாட்டின் நிலையை மேம்படுத்தும் பொறுப்பை மக்கள் ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்